அண்ணாமலை - விக்னேஸ்வரன் சந்திப்பு | மதுபோதை யில் உள்ள கோஷ்டிகள் மோதின. இளைஞன் பலி

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க.வி. விக்னேஸ்வரனை இன்று சந்தித்தார்.

நல்லூரில் அமைந்துள்ள விக்னேஸ்வரனின் இல்லத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமானும் உடனிருந்தார்.



புனித பத்திமா அன்னை திருத்தல வருடாந்த திருவிழா நாளை (04) ஆரம்பம்

பிரசித்திபெற்ற பண்டத்தரிப்பு புனித பத்திமா அன்னை திருத்தல வருடாந்த திருவிழா 4 ஆம் திகதி இன்று புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும்.

நவநாள் வழிபாடுகள் தினமும் மாலையில் இடம்பெறும். 12 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை நற்கருணை வழிபாடுகளும், ஆசீர்வாதமும், 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை திருவிழா கூட்டுத்திருப்பலியின் பின்பு , அன்னையின் திருச்சுருபப் பவனியுடன் திருவிழா நிறைவடையும்.

அண்ணாமலை - விக்னேஸ்வரன் சந்திப்பு | மதுபோதை யில் உள்ள கோஷ்டிகள் மோதின. இளைஞன் பலி

யாழ். மாவட்டத்தில் புனித ரம்ழான் தின துவாப் பிராத்தனை நிகழ்வுகள்

இஸ்லாமிய மக்கள் புனித ரம்ழான் தின துவாப் பிராத்தனை நிகழ்வுகளை, யாழ். மாவட்டத்தில் அனைத்து பள்ளிவாசல்களிலும் முக்கிய இடங்களிலும் சிறப்பாக முன்னெடுத்தனர்.

யாழ். ஒஸ்மானியக் கல்லூரியின் திறந்த மைதானத்தில் புனித ரம்ழான் தின துவாப் பிராத்தனைகள் இடம்பெற்றன.

இந்த துவாப்பிராத்தனையும் குப்த பிரசங்கத்தையும் மௌலவி எ.எச். ரகீம் நடத்தினார்.

இதில் யாழின் பல பாகங்களிலும் இருந்து வருகை தந்த இஸ்லாமிய மக்கள் கலந்துகொண்டனர்.

அண்ணாமலை - விக்னேஸ்வரன் சந்திப்பு | மதுபோதை யில் உள்ள கோஷ்டிகள் மோதின. இளைஞன் பலி

மதுபோதை யில் உள்ள கோஷ்டிகள் மோதின. இளைஞன் பலி

யாழ்ப்பாணம் வடமராட்சி உப்புவல்லை பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் மதுபோதையில் இடம்பெற்ற கோஷ்டி மோதலில் 25 வயதான இளைஞன் உயிரிழந்துள்ளார்.

மது விருந்தில் உருவான வாய்த்தர்க்கமே மோதலில் முடிந்த நிலையில் சாரய போத்தல்களை உடைத்து தாக்கியுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் திக்கம் - நாச்சிமார் கோவிலடியை சேர்ந்த 25 வயதுடைய ஞானசேகரம் குணசோதி என்ற இளைஞன் உயிரிழந்துள்ளான். குறித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்காக கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அவர் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதுடன் குறித்த தனியார் விடுதி பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெல்லியடி போலீசார் மேற்கொண்டுள்ளார்கள்.

அண்ணாமலை - விக்னேஸ்வரன் சந்திப்பு | மதுபோதை யில் உள்ள கோஷ்டிகள் மோதின. இளைஞன் பலி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now





ENJOY YOUR HOLIDAY